Uncategorized

கார்பேட்டரியை எப்படி பராமரிப்பது?

கார் பேட்டரியை இறுக்கிப் பிடித்திருக்கும் பெல்ட் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், கார் செல்லும்போது ஏற்படும் அலுங்கல், குலுங்கல்களில் பேட்டரியிலிருந்து ஆசிட் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.  
பேட்டரி வைக்கப்பட்டிருக்கும் டிரேயில் ஆசிட் கசிந்துள்ளதா என்பதை பார்ப்பது மிக முக்கியம். ஏனெனில், பேட்டரியின் அடிப்பாகத்தை பாதித்து விடும். மேலும், பேட்டரியில் கசிவு இருப்பது தெரியவந்தால் மெக்கானிக்கிடம் சென்று சோதிப்பதுடன், பேட்டரியை மாற்றுவதும் நல்லதே.
கார் எஞ்சின் அணைத்து வைக்கப்பட்டிருக்கும்போது தேவையில்லாமல் ஹெட்லைட்டை ஒளிர விடாதீர். அது பேட்டரி சார்ஜையும், ஆயுளையும் குறைத்துவிடும். பழுதான பல்புகளையும் மாற்றிவிடுங்கள்.
கேபிளில் சில சமயம் பூஞ்சைகள் போன்று பூத்து போவதுண்டு. பிளாஸ்டிக் பிடிகொண்ட சிறிய கத்தியை கொண்டு அதனை சுத்தப்படுத்துங்கள். Petroliem Gel தடவி வைக்கவும்
காரின் டைனமோவிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகாது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் சென்டர் அல்லது மெக்கானிக்கிடம் பேட்டரியில் சார்ஜ் சரியாக இருக்கிறதா என்பதையும், இல்லையெனில், சார்ஜ் ஏற்றி பின்னர் காரில் பொருத்துங்கள்.
வெளியூர் செல்லும்போதோ அல்லது நீண்ட நாட்கள் காரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிந்தால் பேட்டரியிலிருந்து கேபிள்களின் இணைப்பை துண்டித்து விட்டு செல்லுங்கள்.

காரை வெயில், மழை படும் வெட்டவெளியில் நிறுத்தாமல் பாதுகாப்பான ஷெட் அல்லது போர்டிகோவில் நிறுத்துவது நல்லது. பேட்டரியில் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாமல் நீண்ட ஆயுளுடன் நிலைத்து நிற்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *